இலங்கை
மரக்கறி விலை எகிறும்
மரக்கறி விலை எகிறும்
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக எதிர்வரும் நாள்களில் காய்கறி விலைகள் அதிகரிக்கக் கூடும் என்று மெனிங் சந்தை வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் பயிர்ச்செய்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் வரும் வாரங்களில் காய்கறி விலைகள் உயரலாம்.
ஒரு கிலோ கரட் ரூ.100, முட்டைக்கோஸ் ரூ.50, தக்காளி ரூ.100, குடைமிளகாய் ரூ.300, பீன்ஸ் ரூ.150 முதல் ரூ.200, பச்சை மிளகாய் ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
