Connect with us

சினிமா

17 வயதில் தேசிய விருது..23 வயது மூத்தவருடன் திருமணம்!! தற்கொலை செய்து கொண்ட நடிகை..

Published

on

Loading

17 வயதில் தேசிய விருது..23 வயது மூத்தவருடன் திருமணம்!! தற்கொலை செய்து கொண்ட நடிகை..

மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்து, தன்னுடைய சகாப்தத்தின் சிறந்த பெண் நடிகைகளில் ஒருவராக கருதப்பட்ட போதிலும், நடிகை சோபாவின் வாழ்க்கை துரதிர்ஷ்டங்களால் நிரம்பி இருந்தது. தனது முதல் தேசியவிருதை பெற்ற சில வாரங்களிலேயே 17 வயதில் அவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.நடிகை பிரேமா மற்றும் கே பி மேனன் என்ற தம்பதியினருக்கு பிறந்த சோபா, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தில் தனது 4வது வயதில் சிறு ரோலில் நடித்தார். பின் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமான நடித்து கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார். சிறு காலத்திற்கு தமிழ் திரைப்படங்களில் இருந்து விலகிய சோபா, 15 வயதில் த்வீபு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் மலையாள படமான ஓர்மக்கள் மரிக்குமோ படத்தில் கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். 1978ல் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நிழல் நிஜமாகிறது படத்தில் முன்னணி ரோலில் நடித்தார். அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வந்த சோபா, பசி என்ற படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து 17 வயதில் சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றார்.புகழின் உச்சியில் இருந்தபோது கன்னடத்திரைப்படமான கோகிலா படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திராவுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்தும் 23 வயது மூத்தவர் என்றும் பார்க்காமல் பாலு மகேந்திராவை விரும்பினார். அவருக்கு யாரும் கொடுக்க முடியாத ஆறுதலை கொடுத்தார் பாலு.அழியாத கோலங்கள், மூடுபனி போன்ற படங்களில் இருவரும் ஒன்றாக பணியாற்றினார்கள். சட்டப்படி செல்லுபடியாகிறதா இல்லையா என்பது தெரியாவிட்டாலும் சோபாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. முதல் மனைவியை விட்டுவிட்டு தன்னுடன் நிரந்தரமாக இருப்பார் என்று எதிர்பார்த்தார் சோபா. ஆனால் அது நடக்கவில்லை.இது அவருக்கு மிகப்பெரிய மனக்கசப்பை ஏற்படுத்தி, தற்கொலை செய்து கொள்ளத்தூண்டியிருக்கிறது. 1980 மே 1 ஆம் தேதி 18வது பிறந்தநாளுக்கு 4 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். சோபா கொலை செய்யப்பட்டார் என்று அவரின் தாயார் உட்பட பலரும் குற்றம் சாட்டினர்.ஆனால் விசாரணையில் அவரது மரணத்தில் எந்த சந்தேகத்திற்கிடமான அம்சமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தன் மகள் இறப்பை தாங்க முடியாமல் சோபாவின் தாயார் பிரேமாவும் தற்கொலை செய்து கொண்டதாக கூற்ப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன