விளையாட்டு
India vs Australia 2nd ODI Live Streaming: இந்தியா – ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி… ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?
India vs Australia 2nd ODI Live Streaming: இந்தியா – ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள் போட்டி… ஆன்லைனில் நேரலையில் பார்ப்பது எப்படி?
India vs Australia 2nd ODI Cricket Live Streaming: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெர்த்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் நாளை நடக்கிறது. தொடக்கப் போட்டியில் தோல்வி முகம் கண்ட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அதிலிருந்து மீண்டு வர கடுமையாக போராடும். அதேநேரத்தில், மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இந்தியா vs ஆஸ்திரேலியா: 2-வது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அக்டோபர் 23 வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு (இந்திய நேரப்படி) நடைபெறும். டாஸ் இந்திய நேரப்படி காலை 8:30 மணிக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது.இந்தியா vs ஆஸ்திரேலியா: 2-வது ஒருநாள் போட்டி எங்கு நடைபெறும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி அடிலெய்டில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும்.இந்தியாவில் இந்தியா vs ஆஸ்திரேலியா: 2-வது ஒருநாள் போட்டியை எந்த சேனல்கள் ஒளிபரப்பும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இந்தியாவில் உள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.இந்தியா vs ஆஸ்திரேலியா: 2-வது ஒருநாள் போட்டிக்கான நேரடி ஸ்ட்ரீமிங் எங்கே கிடைக்கும்?இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இந்தியாவில் உள்ள ஜியோஹாட்ஸ்டார் ஆப் மற்றும் அதன் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.இரு அணி வீரர்கள் பட்டியல்: இந்திய அணி: ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, பிரஸ்ருவ் கிருஷ்ணா ரெட்டி.ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனொலி, மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்.
