விளையாட்டு
India vs Australia 2nd ODI playing XI prediction 2025: ரோகித், கோலிக்கு இடம் கிடைக்குமா? இந்தியா ஆடும் லெவனில் இழுபறி!
India vs Australia 2nd ODI playing XI prediction 2025: ரோகித், கோலிக்கு இடம் கிடைக்குமா? இந்தியா ஆடும் லெவனில் இழுபறி!
India vs Australia 2nd ODI Playing XI: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெர்த்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் அடிலெய்டில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரின் தலைமையிலான அணிக்கு இது முதல் ஒருநாள் தொடர் ஆகும். தொடக்கப் போட்டியில் தோல்வியைக் கண்ட சூழலில் அதிலிருந்து மீண்டு வர அணி கடுமையாக போராடும். மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடிதிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் தொடக்கப் போட்டியில் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தனர். இந்த இரண்டு மூத்த வீரர்களும் 2027 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை அணியில் தங்களது இடத்தை தக்க வைக்க இந்தத் தொடர் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. பெர்த் போட்டியில் ஆடிய அணியில் இருந்து, இந்தப் போட்டிக்கு சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்திய அணி தீவிரமாக செயல்படும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. இரு அணிகளின் உத்தேச பிளெயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: இந்தியா: ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஓவன், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், சேவியர் பார்ட்லெட்.இரு அணி வீரர்கள் பட்டியல்: இந்திய அணி: ரோகித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, பிரஸ்ருவ் கிருஷ்ணா ரெட்டி.ஆஸ்திரேலிய அணி: டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), மார்னஸ் லாபுசாக்னே, மேத்யூ ஷார்ட், மேட் ரென்ஷா, மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப் (விக்கெட் கீப்பர்), கூப்பர் கோனொலி, மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், ஜோஷ் ஹேசில்வுட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்.
