பொழுதுபோக்கு
உங்களுக்கு ரூல்ஸ் தெரியல… நீ அவளுக்கு கூஜா தான தூக்குற; பெரும் பிரளயத்தில் பிக்பாஸ் வீடு
உங்களுக்கு ரூல்ஸ் தெரியல… நீ அவளுக்கு கூஜா தான தூக்குற; பெரும் பிரளயத்தில் பிக்பாஸ் வீடு
விஜய் டிவி-யில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் என்ன நிகழ்ச்சி இது என்று விமர்சித்த மக்கள் அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்கள் ஆகிவிட்டனர். இன்று என்ன பிரச்சனை வரும்? என்ன திருப்பம் வரும்? யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று ஆவலுடன் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.தமிழில் 8 சீசன்களை கடந்த பிக்பாஸ் தற்போது 9-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சீசன் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் திரைப்பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சமூக வலைதள பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வி.ஜே. பார்வதி, கனி, கலையரசன், திவாகர், அரோரா, ஆதிரை, நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே, வியானா, வினோத், கம்ருதீன், சபரி உட்பட 20 போட்டியாளார்கள் கலந்து கொண்டனர்.இதில், நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, அப்சரா சி.ஜே ஆகிய மூன்று பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். பிக்பாஸ் வீடானது சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ், பிக்பாஸ் ஹவுஸ் என இரண்டு வீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸில் இருப்பவர்கள் தான் பிக்பாஸ் வீட்டை ரூல் செய்து வருகின்றனர். அப்படி, சூப்பர் டீலக்ஸ் ஹவுஸில் இருக்கும் பார்வதிக்கும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கனிக்கும் அடிக்கடி மோதல்கள் வெடித்து வருகிறது.#Day18#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/RNNUuUKznWஇந்நிலையில், தற்போது 18-ஆம் நாளின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. அதில், சொன்ன எதுவுமே பண்ணமாட்டீர்கள் என்றால் அப்பறம் எதுக்கு தான் இந்த வீட்டில் இருக்கீங்க என்று பார்வதியை பார்த்து கனி கேட்கிறார். மேலும், சூப்பர் டீலக்ஸிற்கு வேலை சொன்னால் அதை செய்ய மாட்றீங்க என சண்டை போடுகிறார். அப்போது தலையீட்ட கம்ருதீன் உங்களுக்கு ரூல்ஸே தெரியல என கனியிடம் பேசுகிறார். அதன் பின்னர் இந்த சண்டை பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது. இதில் கடுப்பான கம்ருதீனும், வினோத்தும் நீ என்ன செய்கிறாய் தெரியுமா ஆதிரைக்கு கூஜா தூக்குகிறாய் என்று எஃப்.ஜே-வை பார்த்து பேசுகிறார்கள். இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது.
