இலங்கை
தபால் நிலையத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் பெரும் அட்டகாசம்
தபால் நிலையத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் பெரும் அட்டகாசம்
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, குமாரபுரம் பகுதிகளுக்குள் நேற்று (22) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் பயன் தரும் மரங்களுக்கு சேதங்களை விளைவித்துள்ளன.
இதன்போது கிளிவெட்டி உப தபால் அலுவலக வளாகத்திலிருந்த வாழை, தென்னை மரங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குமாரபுரம் பகுதியில் காணப்பட்ட வாழை, தென்னை முதலான பயிர்களையும் காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.
காட்டுயானைகளின் அச்சுறுத்தல்கலிருந்து மக்களை பாதுகாக்கவும் யானைகள் மரங்களுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்ப்பதற்கும் உரிய அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிளிவெட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
