சினிமா
திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை!! கிண்டலடித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சூரி..
திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை!! கிண்டலடித்த நபருக்கு பதிலடி கொடுத்த நடிகர் சூரி..
நடிகர் சூரி, சிறு சிறு ரோல்களில் நடித்து தற்போது உச்சக்கட்ட நடிகராக உருவெடுத்து தனக்கான ஒரு இடத்தினை பிடித்திருக்கிறார். தீபாவளி அன்று, தன்னுடைய குடும்பத்துடன் வெடிகள் வெடித்து தீபாவளி கொண்டாடிய வீடியோவை சூரி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.சரத்குமார் நடித்த சூரியவம்சம் படத்தின் நட்சத்திர ஜன்னலில் என்ற பாடல் ஒலிக்க சூரியின் அந்த வீடியோவை பார்த்து பலரும் பிரம்மித்தபடி வாழ்த்துக்கள் கூறி வந்தனர்.இந்நிலையில் திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்ததாம் வாழ்க்கை என்று ஒரு நபர் எக்ஸ் தளத்தில் சூரியின் வீடியோ பதிவுக்கு கமெண்ட் செய்திருக்கிறார்.இதை கவனித்த சூரி, “திண்ணையில் இல்லை பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான். அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையையும் மதிப்பையும் கற்றுக் கொடுத்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினால் வெற்றி நிச்சயம்” என்று நல்ல வார்த்தை கூறி பதிலடி கொடுத்துள்ளார்.சூரியின் இந்த அட்வைஸ் பதிலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தும் இதுபோன்ற கமெண்ட்களை கண்டுக்கொள்ளாதீர்கள் என்றும் கூறி வருகிறார்கள்.
