பொழுதுபோக்கு
பணக் கஷ்டத்தில் கண்ணதாசன்… வயிற்று எரிச்சலில் அவர் சொன்ன வார்த்தை; அடுத்த நடந்த கோரம்: பகிர்ந்த வாலி!
பணக் கஷ்டத்தில் கண்ணதாசன்… வயிற்று எரிச்சலில் அவர் சொன்ன வார்த்தை; அடுத்த நடந்த கோரம்: பகிர்ந்த வாலி!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் கவிஞர் வாலி. 50 ஆண்டுகாலமாக திரையுலகில் கோலோச்சிய கவிஞர் வாலி, தமிழ் திரையுலகில் அதிகப்படியான பாடல்களை எழுதி சாதனை படைத்தவர் என்றே கூறலாம். இளையராஜா – வாலி கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. ’ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதலிரவு’, ‘தொட்டால் பூ மலரும், ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’, ‘இந்த புன்னகை என்ன விலை’, ‘காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘நேத்து ராத்திரி யம்மா’ போன்ற ரசிகர்களை கவரும் பல பாடல்களை எழுதியுள்ளார். அதிலும், ’சகலகலா வல்லவன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நேத்து ராத்திரி யம்மா’ பாடல் அன்று முதல் இன்று வரை அனைவரையும் கவரும் பாடலாக உள்ளது. இந்த பாடல் வெளியான பிறகு நடிகை ஷில்க் சுமிதாவிற்கு மட்டுமே ஒரு வருடத்தில் 60 பாடல்கள் எழுதினாராம் கவிஞர் வாலி. இப்படி புகழ் பெற்ற கவிஞராக வலம் வந்த வாலி, கண்ணதாசன் வயிற்று எரிச்சலில் சொன்ன வார்த்தை குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.அவர் பேசியதாவது, “தமிழில் ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும். அதுதான் தமிழனின் வலிமை. இது நிறைய நடந்திருக்கிறது. கண்ணதாசன் கூட அவரது புத்தகத்தில் எழுதி இருப்பார். கண்ணதாசனுக்கு எதோ ஒரு பணம் வர வேண்டி இருந்தது. அந்த பணம் வரவில்லை. அதனால் பல கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அவர் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு கடன் வாங்கியிருக்கிறேன். தயாரிப்பாளர் பணம் தரவில்லை. இந்த ஸ்டுடியோ தீப்பிடித்து எரிந்தால் நல்லது என்று சொன்னார். அன்று மாலை அந்த ஸ்டுடியோ தீப்பிடித்து எரிந்துவிட்டது. A post shared by மாண்புமிகு மக்கள் (@tamilpeople_offl)எம்.கே. தியாகராஜ பாகவதர் தான் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் அந்த காலத்தில். இன்னும் அவருக்கு இணையான சூப்பர் ஸ்டார் யாரும் வரவில்லை. அப்படி எம்.கே. தியாகராஜ பாகவதர் மீது மக்களுக்கு அவ்வளவு ஈர்ப்பு. அவருடைய ‘அரிதாஸ்’ படம் மூன்று வருடங்கள் ஓடியது. அப்போது தியாகராஜ பாகவதை வைத்து வால்மீகி படம் ஆரம்பித்தார்கள். பாகவதர் வால்மீகியாக நடிக்கிறார். முதல் நாள் படப்பிடிப்பின் போது முதல் டயலாக்கே ‘நான் கைதி’ என்று தான் பாகவதர் சொன்னார். அது பூஜை படப்பிடிப்பு என்பதால் அத்துடன் முடிந்துவிட்டது. அன்று மாலை பாகவதர் கைது செய்யப்பட்டார்” என்றார்
