இலங்கை
போலி கடவுச்சீட்டுடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டுடன் வந்தவர் விமான நிலையத்தில் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்குள் நுழைய முயன்ற செனகல் நாட்டவர் ஒருவர் இன்று (23)கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பிரேசில் கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் நாட்டுக்குள் நுழைய முற்பட்டதாக அறியமுடிகிறது.
இந்நிலையில் கைதாகிய அந்த செனகல் நாட்டு குடிமகனை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
