Connect with us

சினிமா

ப்ளூ சட்டை மாறனின் சாயம் வெளுத்தது.! VJ ஆதவன் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

Published

on

Loading

ப்ளூ சட்டை மாறனின் சாயம் வெளுத்தது.! VJ ஆதவன் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

தீபாவளி தினத்தை முன்னிட்டு துருவ் விக்ரம் நடிப்பில்  வெளியான படம் தான் பைசன். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார். கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த கபடி வீரர் எப்படியான இன்னல்களை எல்லாம் எதிர்கொண்டு இந்திய அணிக்காக  கபடி விளையாடி,  தங்கப் பதக்கம் வென்றார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக  காணப்படுகிறது. இதனை  மாரி செல்வராஜ் தனக்கே உரித்தான பாணியில் அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார். இந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது பைசன் பட விமர்சனத்தில்  படத்தின் முதல் காட்சியை சுட்டிக்காட்டி,  இவர்தான் இந்திய அணிக்கு தேர்வாகி விடுகிறாரோ, இவர் கையை உடைத்தால் அவருக்கு என்ன ஆகிவிடப்போகிறது? இவர் கஷ்டப்பட்டதை படமாக எடுத்தால் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது?  அவர்தான் இந்திய அணிக்காக தேர்வாகி விடுகிறாரே என்று தனது விமர்சனத்தில் தெரிவித்து இருந்தார். இதை அவதானித்த  ஆதவன், தனது youtube பக்கத்தில்  ப்ளூ சட்டை  மாறனின் விமர்சனத்திற்கு இணையவாசி ஒருவர் போட்ட கமெண்டையும் குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார். அதில்  ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்திற்கு பதிலடி போட்டவர்,  நாமெல்லாம் இறந்து விடுவோம் என்று தெரியும் தானே,  அப்படி என்றால் எதற்காக பிறக்க வேண்டும்? நாமெல்லாம் டைவோஸ் செய்து விடுவோம் தானே,  அப்படி என்றால் எதற்கு திருமணம் செய்ய வேண்டும்? என கமெண்ட் பண்ணி இருந்தார். உண்மை அதுதான். எப்படியும் ப்ளூ சட்டை மாறன்  படத்தின் விமர்சனத்தை பற்றி கழுவி ஊற்றத்தான் போகிறார்.  அப்படி இருக்கும்போது அவரது விமர்சனத்தை எதற்கு பார்க்க வேண்டும் என  ஆதவன் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன