இலங்கை
வடக்கில் கனமழை சிவப்பு எச்சரிக்கை
வடக்கில் கனமழை சிவப்பு எச்சரிக்கை
வடக்கு மாகாணத்துக்கு கனமழை பெய்வதற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வடக்கில் கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் கிழக்கே ஏற்பட்ட வளிமண்டல குழப்பநிலைமை தற்போது தாழமுக்கமாக மாற்றமடைந்துள்ளது. அது தொடர்ந்தும் வலுவடைந்து இலங்கைக்கு அருகில் வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் வடக்கு மற்றும் மேல், சப்ர கமுவ, மத்திய, வடமேல், தென்மாகாணங்களிலும், அநுராதபுரம் மாவட்டத்திலும் இன்று கனமழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று வரை 976.82 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளது.நெடுந்தீவு மற்றும் அச்சுவேலியில் நேற்றுக் காலை 8 மணி வரையான தகவல்களின் அடிப்படையில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதேநேரம் நேற்று தொண்டைமானாறு பகுதியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது என்று தெரிய வருகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்கால வானிலை அறிவிப்புகள் தொடர்பாகக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
