விளையாட்டு
IND vs AUS 2nd ODI LIVE Score: 265 ரன்கள் இலக்கு: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்!
IND vs AUS 2nd ODI LIVE Score: 265 ரன்கள் இலக்கு: ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்!
IND vs AUS 2nd ODI LIVE Score Updates: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெர்த்தில் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று வியாழக்கிழமை காலை 9 மணி முதல் அடிலெய்டில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தோல்வியுற்ற நிலையில், அதிலிருந்து மீண்டு வர கடுமையாக முயற்சிக்கும். அதே நேரத்தில், வெற்றியை ருசித்த ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தவே நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஆஸ்திரேலிய அணி 7.2 ஓவர்களில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது, 24 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த மிட்செல் மார்ஷ் அர்ஷ்தீப் சிங் பந்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதையடுத்து, மேட் ஷார்ட் பேட்டிங் செய்ய வந்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா பேட்டர்கள் டிராவிஸ் ஹெட் – மேட் ஷார்ட் இருவரும் நிதானமாக ஆடி ரன் எடுத்து வருகின்றனர்.265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் – டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். முதல் ஓவரை முஹமது சிராஜ் வீசினார்.இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 26 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இந்திய அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அர்ஷ்தீப் சிங் 14 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆனார்.. இந்திய அணி 44.6 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நிதிஷ் குமார் ரெட்டி 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஸ்ட்ம்பிங் செய்து வெளியேற்றினார். இந்திய அணி 44.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அக்சர் படேல் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் மிட்செல் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 41.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் 14 பந்துகளில் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சேவியர் பர்த்லெட் பந்தில் ஜோஷ் ஹேஸில்வுட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 36.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கே.எல்.ராகுல் 15 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.இந்திய அணி 32.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சிறப்பாக விளையாடிக்கொண்ருந்த ஸ்ரேயஸ் ஐயர் 77 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆடம் ஜம்பா பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார்.ரோஹித் ஷர்மா 73 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வந்த நிலையில் ஸ்டார்க் வீசிய பந்தில் ஹேசல்வுட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.ரோகித் – ஸ்ரேயாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை ரோகித் சர்மா அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். ஷ்ரேயாஸ் 39 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.சேவியர் பார்ன்ட்லெட் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட்டானார் விராட் கோலி. 4 பந்துகளுக்கு ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஒருநாள் தொடரை இழக்காமல் தக்க வைக்க இன்றைய போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்தியாஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அடிலெய்ட் மைதானத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சு தேர்வு செய்தார்.
