Connect with us

பொழுதுபோக்கு

OTT: ஜனாதிபதி கனவுக்கு தடை… சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவூட்டும் ‘சக்தித் திருமகன்’; எந்த ஓ.டி.டி-யில் பார்க்கலாம்?

Published

on

sakthi thirumagan

Loading

OTT: ஜனாதிபதி கனவுக்கு தடை… சமகால அரசியல் நிகழ்வுகளை நினைவூட்டும் ‘சக்தித் திருமகன்’; எந்த ஓ.டி.டி-யில் பார்க்கலாம்?

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி.  கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘சுக்கிரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி அறிமுகமானார்.  தொடர்ந்து, ’பந்தயம்’, ‘காதலில் விழுந்தேன்’, ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, ‘வேட்டைக்காரன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். பொதுவாக விஜய் ஆண்டனியின் பாடல்கள் பலவும் புரியாத வண்ணம் இருக்கும். ஆனால், அந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் விதமாக இருக்கும். உதாரணத்திற்கு ‘TN 07 AL 4777’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆத்தி சூ’ பாடல் வரிகள் பெரும்பாலும் புரியும் விதமாக அமைந்திருக்காது ஆனால் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோன்று, ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாக்கு முக்கா’ பாடலும் அப்படி தான். இப்படி பல பாடல்களை கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்த விஜய் ஆண்டனி பல படத்தில் பாடல்களையும் பாடியுள்ளார். மேலும்,  ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார்.தொடர்ந்து, இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2’, ‘காளி’ , ‘சலீம்’, ‘எமன்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘ரோமியோ’ போன்ற பல படங்கள் வெளியாகின. சமீபத்தில் அருண் பிரபு இயக்கத்தில் ’சக்தித் திருமகன்’ படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்தார். இந்த படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபாலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அரசியலை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்த இப்படம் செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியனது.தலைமை செயலகத்தில் பணியாற்றும் விஜய் ஆண்டனி, யாருக்கும் தெரியாமல் ‘அரசியல்’ இடைத்தரகராகவும் செயல்படுகிறார். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை சொல்லும் அத்தனை வேலைகளையும் செய்து பெரியளவில் ‘கமிஷன்’ பெற்றுக்கொள்கிறார். அதன்மூலம் ஏழை-எளியோருக்கு பண உதவிகளை செய்தும் வருகிறார். இதற்கிடையில் கோடிக்கணக்கான பணத்துக்கு ஆசைப்பட்டு ஒரு செயலில் இறங்கி, மத்திய அமைச்சரிடம் சிக்கிக் கொள்கிறார் விஜய் ஆண்டனி. இதனால் குறுக்கு வழியில் அவர் சேர்த்த பணம் அவரது கையை விட்டு போகிறது. பணத்தை பறிகொடுக்கும் விஜய் ஆண்டனி ஏன் இப்படி செய்தார்? இறுதியில் அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர் விஜய் ஆண்டனி தனது அபாரமான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருப்பார் இருந்தாலும் ஒரு சில இடங்களில் எமோஷன் மிஸ்ஸாகி இருக்கும். அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சில லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை வரவேற்றனர். இந்நிலையில், ‘சக்தித் திருமகன்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 24-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன