பொழுதுபோக்கு
‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா’… விஜய் ஹிட் பாடலை பாடிய அஜித் பட நடிகை; கமலுக்கு மனைவியாக நடித்தவர்!
‘கட்டிப்புடி, கட்டிப்புடிடா’… விஜய் ஹிட் பாடலை பாடிய அஜித் பட நடிகை; கமலுக்கு மனைவியாக நடித்தவர்!
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற குஷி படத்தில், மும்தாஜ்ஜூடன் விஜய் ஆடும் கட்டிப்புடி, கட்டிப்புடிடா பாடல் பெரிய பிரபலம். இன்றுவரை இந்த பாடல் பலரின் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த பாடலை பாடியவர் அஜித் படத்தின் ஹீரோயின் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.தமிழ் சினிமாவில் தற்போது வில்லனாக கலக்கிக்கொண்டு இருக்கும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான 2-வது படம் குஷி. முதல் படமான அஜித்தின் வாலி பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், 2-வது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. படம் தொடங்கும்போதே க்ளைமேகஸில் இவர்கள் இருவரும் சேரப்போகிறார்கள் என்ற உண்மையை சொல்லிவிட்டு தான் படத்தை தொடங்குவார் எஸ்.ஜே.சூர்யா. காதல் காமெடி, ஆக்ஷன் என கமர்ஷியலாக இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. விஜயுடன் ஜோதிகா, விஜயகுமார், விவேக், மும்தாஜ், பிரபுதேவா சகோதரர், நாகேந்திர பிரசாத், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு, தேவா இசையமைத்திருந்தார் படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் இன்றும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல், இதற்கு விஜய் மும்தாஜ் ஆடிய நடனம் என அனைத்தும் பலரின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்லலாம். இந்த பாடலை பாடியவர் அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். அந்த நடிகை வேறு யாரும் இல்லை. சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை வசுந்தரா தாஸ் தான். கமல்ஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில வெளியான ஹேராம் படத்தில் அவரின் 2-வது மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் அஜித்தை துரத்தி துரத்தி காதலிக்கும் கேரக்டரில், அவரின் குறும்புத்தனங்கள், பலரையும் கவர்ந்தது. அதே ஆண்டு, மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ராவணபிரபு என்ற படத்தில் நடித்திருந்தார், இந்த படமும் பெரிய வெற்றியை கொடுத்தது. கன்னடத்தில் தர்ஷனுடன் லங்கேஸ் பத்ரிகே, இந்தியில் ஃபிலிம் ஸ்டார், மம்முட்டியுடன் வஜ்ரம், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 1999-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படத்தில் வரும் சக்கலக்க பேபி என்ற பாடல் மூலம் பாடகியாகவும் அறிமுகமான இவர், குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா, சிட்டிசன், சில்லுனு ஒரு காதல், மன்மதன், உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
