இலங்கை
கந்தசஷ்டி உற்சவகாலத்தில் நல்லூரில் வீதித்தடைகள்!!
கந்தசஷ்டி உற்சவகாலத்தில் நல்லூரில் வீதித்தடைகள்!!
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கந்தசஷ்டி உற்சவகாலத்தை முன்னிட்டு நேற்றுப்புதன்கிழமை தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வழமைபோல தற்காலிகமாக வீதிகள் தடைசெய்யப்படவுள்ளன.
அத்துடன் நேற்றுத் தொடக்கம் நாளை மறுதினம் 25ஆம் திகதி வரை மற்றும் 28 ஆம் திகதி பி.ப. 5 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை வீதித்தடை போடப்படும். அத்துடன் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை சூரன்போர் அன்று நண்பகல் 12 மணி தொடக்கம் இரவு 7 மணி வரையும் வீதித் தடைசெய்யப்படும். இதன் போது பொதுமக்கள் மாற்றுப்பாதை ஒழுங்குகளைக் கடைப்பிடிக்குமாறு யாழ். மாநகரசபை அறிவித்துள்ளது.
