இலங்கை
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு!
கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு!
கொழும்பு துறைமுக அதானி முனையத்தின் படகுத்துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் சுமார் 5 அடி உயரமும், சற்று வளர்ந்த முடியுடன் கூடிய ஆண் என நம்பப்படுகிறது. பொலிஸாரின் கூற்றுப்படி, மீட்கப்பட்ட உடல் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளதால் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாகவும், மேலும் இறந்தவர் இறக்கும் போது நீல நிற டெனிம் கால்சட்டை அணிந்திருந்தார் எனவும்
நீதிவான் விசாரணைக்குப் பின்னர், சடலம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
