Connect with us

சினிமா

திருட்டுக் களவாணியை கண்டுபிடித்த முத்து; சத்யாவுக்கு தெரிந்த உண்மை?

Published

on

Loading

திருட்டுக் களவாணியை கண்டுபிடித்த முத்து; சத்யாவுக்கு தெரிந்த உண்மை?

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், சீதா கொண்டு சென்ற 5 லட்சம் ரூபாய் பணத்தை  மர்ம நபர்கள் திருடி சென்றதை  வீட்டில் உள்ளவர்களிடம் மீனா கூறுகின்றார். இதன் போது அங்கிருந்த மனோஜ் அந்த பணத்தை சீதாவே திருடி இருக்கலாம் என்று சொன்னதும்  மீனாவுக்கு கோபம் வந்து அவரை திட்டுகின்றார்.விஜயாவும்  சீதா   தான் பணத்தை எடுத்து கார், பங்களா என்று வாங்கலாம் என்று பழி சொல்ல,  முத்து மனோஜ் தான் வீட்டில் இருந்து திருடினான் என்று பேசுகின்றார். அதன் பின் மீண்டும் மனோஜ் சீதாவை பற்றி பேச,.  உன் ரூம்ல திருடு போனப் பணத்தையும் நீ தான் எடுத்து இருப்பா என்று முத்து மனோஜ்க்கு சொன்னதும் கப்சிப் என்று அடங்குகின்றார். இதை தொடர்ந்து சீதா போன ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்குமாறு அண்ணாமலை சொல்லுகின்றார். முத்துவும் அவருடைய வீட்டுக்கு செல்கின்றார். அங்கு அவருடைய மனைவி இவர்களைப் பார்த்ததும் கதவை பூட்டுகின்றார்.  ஆனாலும் முத்துவும் செல்வமும்  நாங்கள் மணியின் நண்பர்கள் தான் என்று நைசாக பேச்சுக் கொடுத்து உள்ளே செல்கின்றனர். இதன்போது என்ன பிரச்சனை என்று கேட்க,  ஆட்டோ  டிரைவர் மணியின் மனைவி, தன் கணவர் அவருடைய தங்கச்சி கல்யாணத்துக்கு வட்டிக்கு வாங்கிய பணத்தை  திருப்ப செலுத்த முடியாமல் போனது பற்றி கூறியதோடு, ஆறு மாதமாக வட்டி கட்டவில்லை என்பதால் இன்றைக்கு பணம் தரவில்லை என்றால் வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்து விடுவோம் என்று மிரட்டி இருக்காங்க ..நீங்க அதுக்காகத்தான் வந்தீங்க என்று பயந்துட்டேன் என்று சொல்லுகின்றார். அந்த நேரத்தில் சத்யா உடன் கடன் கொடுத்தவர்கள் அங்கு வந்ததும் மனைவி பதறுகின்றார். அந்த சமயத்தில் மணியும் 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வருகின்றார். அவரை கையும் களவுமாக முத்து பிடித்து இந்தப் பணம் எப்படி வந்தது  என்று விசாரிக்க, இது ஹாஸ்பிடல் பணம் தான் என்பதை ஒப்புக் கொள்கின்றார். மேலும்  நீ ஆட்களை செட் பண்ணி பண்ணத்த திருடி ஒரு பொண்ணோட வேலையை போக வச்சிருக்க… அந்த பொண்ணு அழுதுட்டு இருக்கா என்று முத்து  திட்டுகின்றார்.. அதன் பின்பு இதனை போலீசில் சொல்ல வேண்டாம் என்று ஆட்டோ டிரைவர் மணி  கெஞ்சுகின்றார். மேலும் அவர் போலீஸ் பிடிச்சிட்டு போனா நாங்களும் உயிரோடு இருக்க மாட்டோம் என்று அவருடைய மனைவியும் சொல்லுகின்றார். இதனால்  தானே அந்த பணத்தை ஆஸ்பத்திரியில் கொடுப்பதாக சொல்லும் முத்து, ஆட்டோ டிரைவர் சிக்காமல் இருக்க பிளான் போடுகின்றார்..  இதுதான்  இன்றைய எபிசோட்..  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன