இலங்கை
பாதாள உலக உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்து வெளியான தகவல்
பாதாள உலக உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்து வெளியான தகவல்
பாதாள குழுத் தலைவரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட சுமார் 30 ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுவினரின் சொத்துக்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஏற்கனவே, கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்புடைய சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில், கம்பஹா – கெஹல்பத்த பகுதியிலுள்ள சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான 28 பேர்ச் காணியும் உள்ளடங்குவதாக குறிப்பிட்டுள்ளதுடன் குறித்த காணி அண்மையில் சட்டரீதியாக முடக்கப்பட்டது.
இதேவேளை, லொகு பெட்டி என்றழைக்கப்படும் மற்றுமொரு பாதாள உலக குழு உறுப்பினரின் சட்டவிரோத சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
