இலங்கை
புதிய வென்டிலேட்டர் இயந்திரம் யாழ்.போதனாவில் கையளிப்பு!
புதிய வென்டிலேட்டர் இயந்திரம் யாழ்.போதனாவில் கையளிப்பு!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் விசேட சிசுப்பராமரிப்புப் பிரிவுக்கான புதிய வென்டிலேட்டர் இயந்திரமொன்றை அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனம் அண்மையில் வழங்கிவைத்துள்ளது.
வடமாகாணத்திலுள்ள பிற மருத்துவமனைகளிலிருந்து மேலதிகச் சிகிச்சைகளுக்காக அனுப்பப்படும் சிசுக்களின் எண்ணிக்கையால் போதியளவு
பராமரிப்புக் கட்டில்கள் மற்றும் இயந்திரத்தேவைகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக வடமாகாணத்தில் அதிகரித்துள்ள குழந்தைப்பேறு இன்மை காரணமாகப் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையைப் பெற்ற பின்னர் பிரசவத்துக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை நாடுகின்றனர். அவர்கள் பிரசவத்துக்கு வரும்போது சில சமயங்களில் பிரசவம் சிக்கலாக ஏற்படுவதால் விசேட சிசுப் பராமரிப்புப் பிரிவின் சேவைகள் மிகவும் அவசியமாகின்றன.
எனவே, இந்தவென்டிலேட்டர் வசதி விசேட சிசுப் பராமரிப்புப் பிரிவின் சேவைகளை மேலும் விரிவுபடுத்த உதவியாகவிருக்கும். அவுஸ்திரேலிய மருத்துவ
உதவி நிறுவனத்துக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதித.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
