Connect with us

இலங்கை

மின்சார கட்டணம் அதிகரிப்பு அவசியம் – IMF அறிவிப்பு!

Published

on

Loading

மின்சார கட்டணம் அதிகரிப்பு அவசியம் – IMF அறிவிப்பு!

மின்சார சபையின் செலவை ஈடுசெய்வதற்காக கோரப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தத்துக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது

அரச நிறுவனங்களின் செலவுகளை ஈடுசெய்யும் கட்ட முறையொன்றை அமுல்படுத்தி அந்த நிறுவனங்களில் ஏற்படக்கூடிய நிதி சார் நெருக்கடி நிலைமையை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்குமெனவும் அந்த நிதியம் தெரிவித்துள்ளது.

Advertisement

எரிபொருள் மற்றும் ஓரலகு மின் உற்பத் திக்காக அந்த நிறுவனங்கள் செலவு செய்யும் நிதி மீண்டும், நுகர்வோரிடமிருந்து அறவிடப்படக்கூடிய கட்டண முறையை நடைமுறைப்படுத்தலானது சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ள.

images/content-image/2024/08/1761290798.jpg

நிதி வேலைத்திட்டத்தின் பிரிதான தூண் என்றும் நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிப்ப தற்கான மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மை யில் நிராகரித்தமை தொடர்பில் பிரதான ஊடகமொன்றுக்கு விளக்கமளிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகப்பேச்சாளர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.

Advertisement

செலவுக்கு ஏற்ற கட்டண முறையை நடைமு றைப்படுத்தாமையின் காரணமாக இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்கள் மீண்டும் நட்டத்தைச் சந்தித்தால், அவ்விரு நிறுவனங்களும் அரசுக்கு சுமையாக மாறும்போது அந்த சுமை வரிச் செலுத்துபவர்களின் மீது சுமத்தப்படுமென்றும் நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் நாணய நிதியம் மேலும்,

ஓரலகு மின் உற்பத்திக்கு செலவு செய்யப்படும் நிதி மீள அறவிடக்கூடிய கட்டண முறை யொன்றை செயற்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சகலவிதமான மின் கட்டணமும் திருத்தப்பட வேண்டும். 

Advertisement

இந்த கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை யின் மின் கட்டணம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

மின் கட்டணத் திருத்தம் சில விடயங்களில் தங்கியுள்ளது. 

அந்த விடயங்களின் இடைக்கால மாற்று விகிதங்கள் தரவுகள், வட்டி விகித தரவுகள், மழைவீழ்ச்சி, எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகிய விற்பனை காணிகளில் கட்டணம் தீர்மானிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

Advertisement

images/content-image/2024/08/1761290847.jpg

அதேபோன்று, சர்வதேச மசகு எண்ணெய்க்கான சந்தை விலையில் ஏற்படும் மாற்றங்கள் மின் கட்டணத்தில் தாக்கம் செலுத்துகின்றன. 

மின்சார சபை கோரியிருந்தாலும் 6.8 சதவீதத்தால் மின் கட்டண அதிகரிப்புக்கான யோசனை கடந்த 14 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்திருந்தது.

அதற்கமைய, இந்த வருடத்தின் எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்கு மின் கட்டணம் மாற்றமின்றி அவ்வாறே அமுலில் இருக்குமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கே.பீ.எல். சந்திரலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

                                                                                     

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1754511373.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன