பொழுதுபோக்கு
அஜித்துக்கு சொன்ன கதை, பிரஷாந்த் ஹீரோ; தீனா படத்துக்கு போட்டியாக பிரவீன் காந்தி செய்த வேலை: படம் ஹிட்டாச்சா?
அஜித்துக்கு சொன்ன கதை, பிரஷாந்த் ஹீரோ; தீனா படத்துக்கு போட்டியாக பிரவீன் காந்தி செய்த வேலை: படம் ஹிட்டாச்சா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று முதல் வாரத்திலேயே வெளியேறிய நடிகரும் இயக்குனருமான பிரவீன் காந்தி, அஜித் நடிப்பில் ஒரு படத்தை இயக்க தயாரானபோது ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தது, அதனால் அவர் படம் தொடங்கும் அதே நாளில் பிரஷாந்த் நடிப்பில் நான் ஒரு படத்தை தொடங்கினேன் என்று கூறியுள்ளார்.நடிகராக வேண்டும் என்று சினிமாவுக்கு வந்த பிரவீன் காந்தி, நடிகராக வாய்ப்பு கிடைக்காத நிலையில், இயக்குனர் பிரியதர்ஷனிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவரின் திறமையை பார்த்த தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், இவருக்கு பட வாயப்பு கொடுக்க அப்போது ஒருவான படம் தான் ரட்சகன். நாகர்ஜூனா நாயகனாக நடித்த அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. ரட்சகன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்த பிரவீன் காந்தி இயக்கத்தில் அடுத்து வெளியான படம் ஜோடி.பிரஷாந்த் சிம்ரன் இணைந்து நடித்த இந்த படத்தில் த்ரிஷா ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். ஜோடி படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரவீன் காந்தி மீண்டும் பிரஷாந்த் நடிப்பில், 2001-ம் ஆண்டு ஸ்டார் என்ற படத்தை இயக்கினார். ஸ்டார் படத்திற்கு பிறகு 6 வருட இடைவெளியில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் தான் துள்ளல். பிரவீன் காந்தி நாயகனாக நடித்திருந்த இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன்பிறகு 2014-ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாறு புலிப்பார்வை என்ற படத்தை இயக்கினார்.தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வெளியில் வந்துள்ள பிரவீன்காந்தி அடுத்து ரட்சகன் 2 படத்தை இயக்க உள்ளதாகவும், இதற்காக நாகர்ஜூனாவிடம் கதை சொல்ல உள்ளதாகவும் கூறி வருகிறார். இதனிடையே சமீபத்திய நேர்காணலில் அஜித் நடிப்பில் ஒரு படம் இயக்க இருந்த வாய்ப்பு பறிபோனதாக பிரவீன் காந்தி கூறியுள்ளார்.ரட்சகன் படத்தை பார்த்து ரஜினிகாந்த் எனக்கு வாய்ப்பு கொடுக்க வந்தார். அந்த வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு. அதன்பிறகு, விஜயிடம் கதை சொல்லி ஓகே பண்ணி வைத்திருந்தேன். ஆனால் கடைசியில் அந்த படமும் நடக்கவில்லை. இறுதியாக அஜித்திடம் கதை சொல்லி ஓகே வாங்கி ஷுட்டிங் போக இருந்த 4 நாட்களுக்கு முன்னதாக, எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வரும் அளவுக்கு செய்துவிட்டார்கள். இதனால் அடுத்த நாளே முருகதாஸை அழைத்து கதை கேட்டு அஜித் நடிக்க ஷூட்டிங் சென்றுவிட்டார்கள். 4 நாட்களில், ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடலையும் ரெக்கார்டு செய்துவிட்டார்கள்.அடுத்த 4 நாட்களில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க தீனா படம் பூஜை போடப்பட்டது. அதே நாளில் நானும், அஜித் நடிக்க இருந்த கதையில் பிரஷாந்தை நாயகனாக வைத்து படத்தை தொடங்கினேன். அந்த படம் தான் ஸ்டார். இந்த படத்தில் மச்சினியே பாடலை நக்மா ஆட வேண்டும் என்று அவரது டேட் வாங்கி வைத்திருக்தேன். ஆனால் கடைசியில் நடக்கவில்லை என்று பிரவீன் காந்தி கூறியுள்ளார்.
