இலங்கை
யாழில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற 37 வயது இளைஞர் கைது
யாழில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற 37 வயது இளைஞர் கைது
யாழ் நகரில் மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற இளைஞர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டார்.
வட்டுக்கோட்டை சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைதானார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போதே கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
குறித்த சந்தேக நபரிடமிருந்து 6 அரை கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
