இந்தியா
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: புதுச்சேரி கவர்னரிடம் சமூக ஆர்வலர் மனு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: புதுச்சேரி கவர்னரிடம் சமூக ஆர்வலர் மனு
புதுச்சேரி: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள புதுச்சேரி யூனியன் பிரதேச அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாண்டிச்சேரி மாணவர்கள் பெற்றோர்கள் வெல்ஃபர் அசோசியேஷன் தலைவர் பாலா இன்று (அக். 25) துணைநிலை ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (CVC) அறிவுறுத்தியுள்ளபடி, அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை பொதுமக்களின் நேரடிப் பங்களிப்புடன் அனைத்துத் துறைகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய முறைகேடுகள் மற்றும் நடவடிக்கைகள்:சுகாதாரத்துறை ஊழல்: 2019-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி சுகாதாரத் துறை மூலம் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் ரூ. 3 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது குறித்து, தற்போது சிபிஐ வழக்குத் தொடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புதிதாக மாற்றல் பெற்று வந்திருக்கும் எஸ்.எஸ்.பி.( SSP)-யால் விசாரிக்கப்பட்டு வருகிறது.மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்: புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் விதிகளை மீறி தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளித்த நடைமுறையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து, பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித் துறை: போக்குவரத்து, பத்திரப் பதிவுத் துறை மற்றும் ஜிஎஸ்டி, சிஎஸ்டி தொடர்பான வணிகவரித் துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகளைச் சென்னை சிபிஐ அதிகாரிகள் 2024 முதல் விசாரித்து வருகிறார்கள்.பொதுப்பணித்துறை குற்றப்பத்திரிக்கை: பொதுப்பணித்துறையைச் சேர்ந்த முன்னாள் தலைமைப் பொறியாளர் மற்றும் காரைக்கால் செயற்பொறியாளர் ஆகிய இருவர் மீதான வழக்கில், சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு குற்றப்பத்திரிக்கையை அக்டோபர் 23, 2025 அன்று சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு: வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவப் படிப்பு இடங்களில் போலி ஆவணங்கள் மூலம் வெளிநாட்டுத் தூதரகச் சான்று பெற்று விண்ணப்பித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.ஆளுநரிடம் முக்கியக் கோரிக்கைஆகவே, புதுச்சேரி அரசு மேற்கண்ட அனைத்துத் துறைகளிலும் நடைபெற்ற கோடிக்கணக்கான ஊழல் மீது தீவிர நடவடிக்கை எடுத்து, குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ள அதிகாரிகளின் சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் பாலா கோரிக்கை விடுத்துள்ளார்.இதேபோல், புதுச்சேரி காவல்துறை சார்பில் வார இறுதி நாளான சனிக்கிழமை அன்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டுத் தீர்வு காணும் மக்கள் மன்றம் நடத்தப்படுவது பாராட்டத்தக்கது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
