இலங்கை
நடு வீதியில் குடைசாய்ந்த வேன் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
நடு வீதியில் குடைசாய்ந்த வேன் ; பரிதாபமாக பிரிந்த உயிர்
வெலிகந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிகந்த கட்டுவன்வில வீதியில் அத்துகல பகுதியில், இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு, கட்டுவன்வில நோக்கிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி, கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது காயமடைந்த வேனின் சாரதி, வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், கட்டுவன்வில, வெலிகந்த பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் வெலிகந்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
