இலங்கை
போலி வாட்ஸ்அப் குழுக்கள் குறித்து கல்வி அமைச்சின் எச்சரிக்கை!
போலி வாட்ஸ்அப் குழுக்கள் குறித்து கல்வி அமைச்சின் எச்சரிக்கை!
புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி பேரவை என்ற பெயரில் செயல்படும் ஒரு போலியான வட்ஸ்அப் குழு குறித்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி மண்டலங்கள் முழுவதும் ஆசிரியர்களை ஒன்றிணைப்பதாக இந்தக் குழு கூறியுள்ளது. இந்த நிலையில், எந்த வகையிலும் இந்த குழு கல்வி அமைச்சுடன் இணைக்கப்படவில்லை என்று அமைச்சு, அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தகவல் தொடர்புகள் அல்லது செயல்பாடுகளுக்கும் அமைச்சு பொறுப்பேற்காது, எனவே கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்த முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிக்கும் குழுக்களால், தவறாக வழிநடத்தப்படுவதைத் தவிர்க்குமாறும், அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
