Connect with us

இலங்கை

போலி WhatsApp குழு தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை

Published

on

Loading

போலி WhatsApp குழு தொடர்பில் கல்வி அமைச்சு எச்சரிக்கை

போலியான WhatsApp குழு குறித்து பொதுமக்களுக்குக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

(Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் குறித்த WhatsApp குழுவானது, கல்வி வலயங்கள் முழுவதும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதாகக் கூறிக்கொள்வதாகவும், ஆனால் இது கல்வி அமைச்சுடன் தொடர்புடையதல்ல எனவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

அத்துடன் இந்தக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தகவல் தொடர்புகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொறுப்பேற்காது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அரசின் புதிய கல்வி மறுசீரமைப்பு முயற்சிகளைத் திசைதிருப்ப முயற்சிக்கும் இத்தகைய குழுக்களால் ஏமாறாமல் ஆசிரியர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன