இலங்கை
யாழ்ப்பாணத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ; ஆரம்பமாகும் மில்லர் திரைப்பட படப்பிடிப்பு
யாழ்ப்பாணத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ; ஆரம்பமாகும் மில்லர் திரைப்பட படப்பிடிப்பு
ஐபிசி தமிழின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ள முழுநீள மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக கவிஞர் வைரமுத்து இன்று (26.10.2025) இலங்கை வருகை தந்துள்ளார்.
யாழ்ப்பாண விஜயம் தொடர்பாக அவர் தனது ‘X’ கணக்கில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
தனது நண்பரான பாஸ்கரன் கந்தையா தயாரிக்கும் மில்லர் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் செல்ல உள்ளதாக அவர் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர் வெல்லட்டும்;
தொட்டது துலங்கட்டும்
என் நண்பரின் வளர்ச்சிக்கு
வாழ்த்துச் சொல்லச் செல்கிறேன்;
நாளையே திரும்பிவிடுவேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா, இன்று மாலை 6 மணியளவில் யாழ். வலம்புரியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
