Connect with us

சினிமா

ரஜினியைப் போல தங்கமான மனசு யாருக்குமே இல்ல.. பிரபல இயக்குநர் ஓபன்டாக்.!

Published

on

Loading

ரஜினியைப் போல தங்கமான மனசு யாருக்குமே இல்ல.. பிரபல இயக்குநர் ஓபன்டாக்.!

தமிழ் திரைப்பட உலகில் ஒரு சின்னத்தின் பெயராக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மனிதநேயத்தாலும், தாராள மனதாலும் ரசிகர்களிடையே என்றும் சிறப்பு பெற்றவர். இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் இயக்குநர் எஸ்.பி.எம் (SPM) அவர்கள் பகிர்ந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.அவர், ரஜினிகாந்த் நடித்த 1992 ஆம் ஆண்டு வெளியான “பாண்டியன்” திரைப்படம் குறித்த அரிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.“பாண்டியன்” படம் 1992 ஆம் ஆண்டு வெளியானது. அதில் ரஜினிகாந்த், குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அதன் பின்னணியில் நடந்த சில விஷயங்கள் அந்நாளில் வெளிவரவில்லை.இப்போது, அந்த உண்மைகளை இயக்குநர் SPM வெளிப்படையாக கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர், “இயக்குநர்களோட வருமானம் என்பது படத்தில் தான் உள்ளது. Averageன்னு சொல்லுற “பாண்டியன்” படம் நஷ்டம் அடைந்த தொழிலாளர்களுக்காக எடுக்கப்பட்டது. ரஜினிகாந்த் சார் எங்களுக்காக பெரிய மனதோட அந்தப் படத்தை பண்ணி கொடுத்தாங்க. அதுல வந்த லாபத்தை நாங்க சமமாக பகிர்ந்து கொண்டோம். ரஜினி மனசு ரொம்ப தங்கம்.” என்று கூறியுள்ளார். அந்த வாக்கியம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த வரிகள் இணையத்தில் பரவியவுடனே, ரசிகர்களும் திரைப்பட பிரபல்களும் ரஜினிகாந்தின் மனிதநேயத்தை பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன