இலங்கை
வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; பெண்ணுடன் மூவர் கைது
வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை ; பெண்ணுடன் மூவர் கைது
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
