இலங்கை
200 அடி பள்ளத்தில் வீழ்ந்த மாடு.!
200 அடி பள்ளத்தில் வீழ்ந்த மாடு.!
பதுளை – லெஜர்வத்த மீரியகல பகுதியில் 200 அடி பள்ளத்தில் மாடு ஒன்று நேற்றைய தினம் வீழ்ந்துள்ளது.
குறித்த மாட்டை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் மும்முரமாக விரைந்து செயற்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஐவர் கொண்ட குழு ஒன்று சங்கிலிகளின் உதவியுடன் மாட்டை பள்ளத்தில் இருந்து மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
