பொழுதுபோக்கு
அடையாளத்தை தொலைக்க வேண்டும்… பிக்பாஸ் போட்ட கட்டளை; அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
அடையாளத்தை தொலைக்க வேண்டும்… பிக்பாஸ் போட்ட கட்டளை; அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மற்ற மொழிகளில் எப்படி பிக்பாஸ் பிரபலமாக உள்ளதோ அதே போன்று தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக உள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 9-வது சீசனை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றனர். அதன்பின்னர் அந்த நடைமுறை மாறி தற்போது சமூக வலைதள பிரபலங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர்.அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சமூக வலைதள இன்புளூவன்சர்கள் அதிகம் பங்கேற்றுள்ளனர். வி.ஜே.பார்வதி, கம்ருதீன், கலையரசன், திவாகர், கனி, அப்சரா சி.ஜே, பிரவீன் காந்தி, வினோத், ஆதிரை, அரோரா, ரம்யா ஜோ, சுபிக்ஷா, நந்தினி உட்பட 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், முதல் வாரத்தின் எலிமினேஷனுக்கு முன்பே போட்டியாளர் நந்தினி தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.இதையடுத்து, முதல் வாரத்தில் பிரவீன் காந்தி, எலிமினேட் செய்யப்பட்டார். அதன்பின்னர், அப்சரா சி.ஜே, ஆதிரை என ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டனர். இனி வரும் வாரங்களில் யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வி.ஜே.பார்வதியும், திவாகரும் அதிகம் கண்டெண்ட் கொடுப்பதால் மக்கள் அவர்களை வெறியேற்ற ஓட்டளித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் அவர்களை வெளியேற்றமாட்டார்கள் என்றும் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது.பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் மோதல் போக்கு நீட்டித்து வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 22-வது நாளின் முதல் ப்ரொமோவில், கனிக்கு டெலிவரி செய்ய வேண்டிய துணிகளை வி.ஜே.பார்வதி வீட்டு வாசலில் வைத்துவிட்டு வருகிறார். அதை பார்த்து ஆத்திரமடைந்த கனி வாசலில் நின்றுகொண்டு ஒருத்தர் நன்றி என்று சொல்லி கையில் வாங்கும் பொழுது பொருளை கீழே வைத்துவிட்டு போவது ரொம்ப… ரொம்ப தவறு என்கிறார்.#Day22#Promo1 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/ZujcwLXpB7அதற்கு பார்வதி நான் பர்சனல் துணிகளை தொடமாட்டேன் என்கிறார். அதற்கு கனி, மன்னிப்பு கேட்டுவிட்டு துணிகளை கையில் எடுத்து தர வேண்டும் என்கிறார். இதனால் கடுப்பான பார்வதி, என்னையே டார்க்கெட் பண்ணி மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்று கூறுகிறார். இதற்கு கனி பிக்பாஸ் வீட்டு வாசலில் இருந்து கொண்டு நான் நியாயமா ஒரு விஷயம் செய்திருக்கிறேன் எனக்கு மன்னிப்பு வேண்டும் என்கிறார். பார்வதியும் நானும் இங்கு தான் இருப்பேன் என்று பிக்பாஸ் வீட்டு வாசலில் இருவரும் இருக்கிறார்கள். இப்படி முதல் ப்ரொமோ முடிவடைகிறது.#Day22#Promo2 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/cWIq9ptMcOஇரண்டாவது ப்ரொமோவில், துணியை வி.ஜே.பார்வதி தான் எடுக்கனும். மன்னிப்பு கேட்டு என் கையில் தர வேண்டும் என கனி சொல்கிறார். அதற்கு பார்வதி மறுப்பு தெரிவிக்கிறார். இதனால் கோபமடைந்த கனி, மன்னிப்பு கேட்கவில்லை என்றால் சாப்பிடவே மாட்டேன் என்கிறார். அதற்கு பார்வதி இவங்க சாப்பாட்ட வச்சுதான் எல்லா அரசியலும் செய்வாங்க. உங்க துணியை கீழ வச்சதுக்கு என்னை மன்னித்துவிடுங்கள் என்று பார்வதி கூறுகிறார். இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. #Day22#Promo3 of #BiggBossTamilBigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9#OnnumePuriyala#BiggBossSeason9Tamil#BiggBoss9#BiggBossSeason9#VijaySethupathi#BiggBossTamil#BB9#BiggBossSeason9#VijayTV#VijayTelevisionpic.twitter.com/c822MhT7hxஇதையடுத்து வெளியான மூன்றாவது ப்ரொமோவில் பிக்பாஸ், நீங்க எல்லாரும் இந்த வீட்டிற்கு வந்ததன் நோக்கம் உங்கள் அடையாளத்தை மக்களுக்கு பறைசாற்ற வேண்டும் என்று தான். நீங்கள் கொண்டு வந்த உடைகள், உபகரணங்கள், காலணிகள் உட்பட அனைத்தையும் தொலைத்து அதை மீண்டும் அடைவதற்காக போராட போறீங்க என்று கூறுகிறார். இதை கேட்ட போட்டியாளர்கள் தங்கள் உடைமைகளை ஒரு பெட்டியில் வைத்து ஒரு அறையில் வைக்கின்றனர். இத்துடன் இந்த ப்ரொமோ முடிவடைகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
