இந்தியா
கரூர் உயிரிழப்புகள் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மீதும் வழக்கு
கரூர் உயிரிழப்புகள் தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் மீதும் வழக்கு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விடயத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரியவருகின்றது. கரூரில் செப்ரெம்பர் மாதத்தின் இறுதியில் விஜய் முன்னெடுத்த தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. இது வரையான விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றத்தில் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், தமிழக வெற்றிக்கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இதையடுத்தே, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட சாத்தியங்கள் அதிகம் உள்ளன எனக் கூறப்படுகின்றது.
