இலங்கை
ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அநுர தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு -செலவுத் திட்டம் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நிதி அமைச்சர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரைக்கு அனுமதி பெறுவதற்காக விசேட அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது.
ஜனாதிபதியின் வரவு – செலவுத்திட்ட உரை 2ஆம் வாசிப்பாக கருதப்படும். 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறும். 14ஆம் திகதி மாலை 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும். அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகும். வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச மொத்த செலவினமாக 4 ஆயிரத்து 434 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
