இலங்கை
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் தேசிய ரீதியில் இவ்வாரம் ஆரம்பம்
போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் தேசிய ரீதியில் இவ்வாரம் ஆரம்பம்
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் ‘தேச ஒருமைப்பாடு – தேசிய இயக்கம்’ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சுகததாச மைதானத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய சபை, மாவட்ட சபைகள், பிராந்திய சபைகள் மற்றும் பொதுப்பாதுகாப்புக் குழுக்கள் ஆகிய நான்கு முக்கியமான துறைகள் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒன்றிணையவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
