சினிமா
மீண்டும் என்ட்ரி கொடுத்த ஹன்ஷிகா.. இன்ஸ்டாவில் வைரலான வீடியோவால் குஷியில் ரசிகர்கள்.!
மீண்டும் என்ட்ரி கொடுத்த ஹன்ஷிகா.. இன்ஸ்டாவில் வைரலான வீடியோவால் குஷியில் ரசிகர்கள்.!
தென்னிந்திய திரைத்துறையில் தனது இனிமையான நடிப்பு மற்றும் கவர்ச்சியான புன்னகையால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ஹன்சிகா மோட்வானி, சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிர்ந்த வீடியோவால் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.அவர் தற்போது ராஜஸ்தானின் பிரபலமான ரந்தம்போர் தேசிய பூங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.ஹன்ஷிகாவின் க்யூட் எக்ஸ்பிரஷன்களும், புன்னகையும் அவரை ரசிகர்களின் பிரியமான நடிகையாக்கின. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இரண்டிலும் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற ஹன்சிகா, தற்போது பல்வேறு வணிக விளம்பரங்களிலும் ஈடுபட்டு வருகிறார்.ஹன்சிகா 2022 ஆம் ஆண்டு சோஹைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு, இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிவு ஏற்பட்டது என தகவல்கள் வெளியாகின. இதனால் ஹன்சிகா சற்று அமைதியாகி, சமூக ஊடகங்களில் குறைவாகவே பதிவுகள் வெளியிட்டார்.இப்போது, ரந்தம்போரில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளதால், ரசிகர்கள் “ஹன்சிகா மீண்டும் என்ட்ரி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்…” என கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.
