Connect with us

சினிமா

விஜய் சேதுபதி பேச்சால் விழித்த கானா வினோத்.. பிக்பாஸ் வீட்டில் நிகழும் அதிரடி திருப்பங்கள்

Published

on

Loading

விஜய் சேதுபதி பேச்சால் விழித்த கானா வினோத்.. பிக்பாஸ் வீட்டில் நிகழும் அதிரடி திருப்பங்கள்

தமிழ் தொலைக்காட்சி உலகில் பெரும் வரவேற்பைப் பெறும் ரியாலிட்டி நிகழ்ச்சி ‘பிக்பாஸ் சீசன் 9’ தற்போது உச்சகட்ட பரபரப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பல வித்தியாசமான போட்டியாளர்கள், தங்களது செயலால் பார்வையாளர்களிடையே பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.அதிலும், இந்த வார இறுதி எபிசொட்டில் நடுவர் விஜய் சேதுபதி ரசிகர்களை மட்டுமல்ல, வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தார். வழக்கமாக அவர் அமைதியாக பேசி வந்தார். ஆனால் இம்முறை, அவர் கடுமையான எச்சரிக்கைகளும், ஆதரவும் கலந்த வார்த்தைகளால் பிக்பாஸ் வீட்டை கலக்கியுள்ளார்.‘பிக்பாஸ் 9’ இந்த வாரம் பல சண்டைகள், மனக்கசப்புகள், குழப்பங்கள் என கூச்சலாக முடிந்தது. இதனால் பார்வையாளர்கள் வார இறுதி எபிசொட்டில் விஜய் சேதுபதி என்ன கூறப் போகிறார் என ஆவலுடன் காத்திருந்தனர்.நிகழ்ச்சி தொடங்கியவுடன் அவர் ஒவ்வொரு போட்டியாளரின் செயல், வார்த்தை, விளையாட்டு முறை ஆகியவற்றை ஆராய்ந்து பேசினார். சிலருக்கு பாராட்டு தெரிவித்தார், சிலருக்கு நேரடி கண்டிப்பு அளித்தார்.இந்த வாரம் நடந்த சில சம்பவங்களில் அவர் வெளிப்படையாக தனது கருத்தை பதிவு செய்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றது. குறிப்பாக, சிலர் தங்கள் செயலால் ரசிகர்களின் எதிர்மறை பார்வையை பெற்றிருந்தனர். அவர்களுக்கு விஜய் சேதுபதி அளித்த எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகி வருகிறது.இந்த வார எபிசொட்டின் முடிவால் கானா வினோத் தனது செயல்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் வீட்டில் தன்னுடைய உண்மையான மனநிலையை வெளிப்படுத்தாமல்,  சற்று குழப்பமான நிலையில் இருந்த வினோத், விஜய் சேதுபதியின் பேச்சுக்குப் பிறகு முழுமையாக மாறியுள்ளார்.இந்நிலையில் வினோத் பிக்பாஸ் வீட்டிற்குள், “என்னுடைய கேமை நான் விளையாடுறேன்.யாருக்கும் சப்போர்ட் பண்ணல. யாரையும் எதிர்க்கவும் இல்ல. அது நியாயமோ அதைத்தான் நான் பேசுறேன். என் family-க்காக நான் விளையாடப் போகிறேன்.” என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் பார்வையாளர்களின் மனதில் வலுவாக பதிந்துள்ளதுடன் பலரும் இதனை வைரலாக்கி வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன