விளையாட்டு
விலா எலும்பில் காயம்; ரத்தப்போக்கு… ஐ.சி.யு-வில் ஸ்ரேயாஸ் அனுமதி
விலா எலும்பில் காயம்; ரத்தப்போக்கு… ஐ.சி.யு-வில் ஸ்ரேயாஸ் அனுமதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், ஒருநாள் போட்டி அணியின் துணை கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர், விலா எலும்புக் காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அதன் மருத்துவக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐயரை மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்க முடிவு செய்தது. இது குறித்து பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு எதிர்பாராத விபத்துக் காயம், மருத்துவக் குழு மருத்துவமனையுடன் தொடர்பில் உள்ளது. அவரது விலா எலும்புக் கூண்டில் இரத்தப்போக்கு இருந்ததால், மீண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மருத்துவக் குழு அவருக்கு அறிவுறுத்தியது. இந்த வார இறுதியில் அவர் குணமடைவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறியுள்ளார்.சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரியை அவுட் செய்ய, ஓடிச் சென்று ஒரு அருமையான கேட்சைப் பிடித்தபோதுதான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. பாயிண்ட் பகுதியில் இருந்து பின்னோக்கி ஓடி வந்து கேட்சைப் பிடித்த அவர், புல் தரையில் விழுந்தபோது அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.இது குறித்து பி.சி.சி.ஐ செயலாளர் தேவாஜித் சைகியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 25, 2025 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்போது ஃபீல்டிங் செய்தபோது, ஷ்ரேயாஸ் ஐயர் இடது கீழ்ப்புற விலா எலும்புக் கூண்டு பகுதியில் தாக்கம் ஏற்பட்டு காயம் அடைந்தார். இது தொடர்பான பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன்கள் மண்ணீரல் பகுதியில் கிழிந்த காயத்தை) வெளிப்படுத்தியுள்ளன. தற்போது அவர் சிகிச்சையில் இருக்கிறார். மருத்துவ ரீதியாக நிலையாக உள்ளார், மேலும் நன்றாக குணமடைந்து வருகிறார். பி.சி.சி.ஐ மருத்துவக் குழு, சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, அவரது காயத்தின் நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அவரது தினசரி முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்திய அணியின் மருத்துவர் ஷ்ரேயாஸுடன் சிட்னியிலேயே இருப்பார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.விலா எலும்புகளில் கடுமையான வலி இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதால், பீல்டிங் செய்வதில் இருந்து பாதியில் வெளியேறினார். மேலும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த ஆட்டத்தில், ரோஹித் சர்மா (121 நாட் அவுட்) மற்றும் விராட் கோலி (74 நாட் அவுட்) ஆகியோரின் சிறப்பான பார்ட்னர்ஷிப் மூலம் 237 ரன்களைத் துரத்தி இந்திய அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா அணியின் நடு வரிசை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர், முதுகுப் பகுதியில் விறைப்பு மற்றும் சோர்வு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப்’ போவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு முன்னதாக கடிதம் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை வாரியம் ஏற்றுக்கொண்டது. 30 வயதான ஐயர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பெர்த் மற்றும் அடிலெய்டு போட்டிகளில் விளையாடி 11 மற்றும் 68 ரன்கள் எடுத்தார்.
