பொழுதுபோக்கு
ஒரே சைகை தான், மொத்த கூட்டமும் சைலண்ட்; திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித் வீடியோ!
ஒரே சைகை தான், மொத்த கூட்டமும் சைலண்ட்; திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித் வீடியோ!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக அஜித் குமார் கடந்த சில நாட்களாக கோவில்களில் சாமி தரிசனம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் அஜித். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள இவர், நடிப்பு மட்டும் இல்லாமல், துப்பாக்கிச்சூடு, கார் மற்றும் பைக் ரேஸ், உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் தன்னை நிரூபித்து வருகிறார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்திற்காக தனி அணியை உருவாக்கிய அஜித், அந்த போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்தார் இதனிடையே நடப்பு ஆண்டில் இவரது நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்கள் வெளியானது. இதில் விடா முயற்சி சற்று கலவையாக விமர்சனங்களை பெற்றிருந்தாலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம், அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், அவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.சினிமாவை கடந்து விளையாட்டு போட்டிகளிலும் அசத்தி வரும் அஜித், சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்து சாதித்த நிலையில், இந்த ஆண்டு மலேசியா, அடுத்த ஆண்டு (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் தனது ரேசிங் அணியுடன் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்குள் தனது அடுத்த படத்தை முடித்துவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் அஜித் குமார், படத்தை தான் இயக்க உள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரனே ஒரு மேடையில் கூறியிருந்தார். மேலும் இந்த படம் ஜனரஞ்சகமான கமர்ஷியல் படமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். புதிய படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ள அஜித், சமீபத்தில், தனது குடும்பத்தினருடன் பாலக்காட்டில் உள்ள பகவதியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது வெளியான ஒரு போட்டோவில் அஜித் தனது நெஞ்சில் பகவதியம்மனை டாட்டூ போட்டிருந்தது பெரிய கவனம் ஈர்த்தது. இதுதான் அஜித்தின் குலதெய்வம் என்றும் கூறப்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் தல அஜித்குமார் சாமி தரிசனம்.🙏 @Akracingoffl@SureshChandraa#AjithKumar#AK64#Attagasam#Ajithkumar𓃵#Ajithkumar𓃵#AjithKumarRacingpic.twitter.com/oPWQKGUfK5இதனிடையே அஜித் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. காலை நடைபெற்ற சுப்ரபாத சேவையின் போது வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரைக் கண்ட ரசிர்கள் தல, தல என்று கூச்சலிட்டனர். அப்போது கோவிலில் அமைதியாக இருக்குமாறு சைகை காட்டினார். அதன்பிறகு அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
