இலங்கை
தமிழர் பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர்
தமிழர் பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இளைஞனின் உயிர்
மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்டபோது, மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் இருந்தவர் இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் கிராண் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
