இலங்கை
நடுக்கடலில் தத்தளித்த கப்பல்; இலங்கை உதவிக்கரம்!
நடுக்கடலில் தத்தளித்த கப்பல்; இலங்கை உதவிக்கரம்!
இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பகுதியில், தொழில்நுட்பக் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய வர்த்தகக் கப்பலின் 14 பணியாளர்களை இலங்கைக் கடற்படை மீட்டுள்ளது. வியட்நாமில் இருந்து எகிப்து நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வர்த்தகக் கப்பல், இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல்மைல் தொலைவில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தத்தளித்தபோதே இலங்கைக் கடற்படை உதவியுள்ளது. மீட்கப்பட்ட அந்தக் குழுவினர் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டனர் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
