Connect with us

சினிமா

மக்களோட மக்களாக நிற்கணும்… அவன் தான் தலைவன்.! விஜயை விமர்சித்த நடிகர் கருணாஸ்.!

Published

on

Loading

மக்களோட மக்களாக நிற்கணும்… அவன் தான் தலைவன்.! விஜயை விமர்சித்த நடிகர் கருணாஸ்.!

சமீபத்தில் கரூர் பகுதியில் நடந்த த.வெ.க கூட்ட நெரிசல் குறித்து நடிகர் கருணாஸ் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகில் தனது நடிப்பையும், சமூக உணர்வையும் முன்வைத்து பிரபலமான கருணாஸ், தற்பொழுது த.வெ.க தலைவர் விஜய் தொடர்புடைய கருத்துகளை வெளியிட்டது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.கருணாஸ் அதன்போது, “சும்மா விஜய் கரூர் போன கூட்டம் வரும் என்றால்… விஜயகாந்துக்கு வந்த கூட்டத்தை விடவா விஜய்க்கு வருது… விஜயகாந்த் அந்தக் கூட்டத்தை சமாளிக்கலையா? தலைவன் என்றால் மக்களோட மக்களாக நிற்கணும்.. மக்களுக்கு ஒன்னுனா ஓடி வரணும். ஓடிப் போக கூடாது. மக்களுக்காக மக்களாக நிற்பவன் தான் உண்மையான தலைவன். மக்களை ஆள நினைக்கும் நீங்கள் முதலில மக்களோடு மக்களாக இருங்க..” என்று தெரிவித்துள்ளார். கருணாஸ் இவ்வாறு கூறிய பின்னர், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் இந்த கருத்து பரவலாக பகிரப்படுகிறது. ரசிகர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், இந்த கருத்தைப் பற்றிய பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன