இலங்கை
யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் சந்தேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று அதிகாலை சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் அடிப்படையில், சுன்னாகம் பொலிஸ் நிலைய சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த நபரிடமிருந்து 2ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
33 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
