இலங்கை
யாழ்.குடிவரவு திணைக்கள வாயிலில் மூடாமல் காணப்படும் வடிகால்கள்; மக்கள் பெரும் சிரமம்!
யாழ்.குடிவரவு திணைக்கள வாயிலில் மூடாமல் காணப்படும் வடிகால்கள்; மக்கள் பெரும் சிரமம்!
யாழ்ப்பாணம் குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்திற்கு முன்பு உள்ள வடிகால்கள் மூடாமல் காணப்படுவதால் கழிவுநீர் தேங்கிக் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
திணைக்களத்திற்கு ஒவ்வொரு நாள் குறிப்பிட்டளவில் மக்கள் செல்கின்றனர். கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதிக்குச் செல்லும் வாயிலில் கழிவுநீர் தேங்கி சேறாகக் காணப்படுவதுடன் அங்குள்ள வடிகால்கள் சில மூடாமல் காணப்படுவதால் அங்கும் கழிவுநீர் தேங்கிக் காணப்படுகின்றது. கழிவுநீர் தேங்கிக் காணப்படுவதால் சுவாசிக்க முடியாத அளவிற்கு பெரும் சிரமத்திற்கு மக்கள் உள்ளாகின்றனர். அதுமட்டுமன்றி நேற்று குறித்த பகுதியால் சென்ற காரொன்று மூடாமல் இருந்த வடிகால் பள்ளத்திற்குள் சிக்கி விபத்திற்குள்ளாகியது. கார் சிறிதளவில் சேதமடைந்ததாகவும் எவருக்கும் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது போன்றே குறித்த பகுதியில் மூடாமல் காணப்படும் வடிகால்களால் பெரும் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் குறித்த வடிகால்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
