இலங்கை
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்!
யாழ்.பல்கலை ஊழியர் பிரச்சினை நேரடித் தலையீட்டில் தீர்க்கப்படும்!
துணைவேந்தர் உறுதியளிப்பு
யாழ். பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறப்புக் கவனம்செலுத்தி, தாமே நேரடியாகக் கையாண்டு, ஓரிரு வாரங்களுக்குள் தீர்வுகளை வழங்குவதாக துணைவேந்தர் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் போதனைசாரா ஊழியர்கள், துணைவேந்தரை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர்
இதனைத் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் ஊழியர்கள், தரப்பில் முன்வைக்கப்பட்ட நியாயங்களையும் பிரச்சினைகளையும் துணைவேந்தர் ஏற்றுக்கொண்டதுடன், பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தி உட்பட சில விடயங்கள் தனக்கு தெரியாதவை எனவும். உண்மை நிலைமையை அறிய எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.
