உலகம்
ரஷ்யாவைத் தாக்கினால் உக்ரைன் அழிக்கப்படும்; அதிபர் புடின் மிரட்டல்!
ரஷ்யாவைத் தாக்கினால் உக்ரைன் அழிக்கப்படும்; அதிபர் புடின் மிரட்டல்!
உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளால் ரஷ்யாவைத் தாக்கினால், உக்ரைன் அகழிக்கப்படுவது உறுதி என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுடனான மோதல் தொடர்பில் ரஷ்ய அதிபர் புடின் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர்மேலும் தெரிவித்ததாவது:
நீண்டதூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் அதற்கு ரஷ்யாவின் பதிலடி கற்பனை செய்து கூட பார்க்கமுடியாததாக அமையும். ரஷ்யாமீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் பாரதூரமானவை. போரைத் தீர்க்கும் முயற்சியாக நாங்கள் இதைப் பார்க்கவில்லை. இறைமை மீது நம்பிக்கையுள்ள எந்த நாடும் இத்தகைய செயற்பாடுகளை ஏற்கப் போவதில்லை. எனவே, அமெரிக்காவின் தடைகளுக்கு ரஷ்யா அடிபணியாது
-என்றார்.
