இலங்கை
‘லைசென்ஸ்’ புதுப்பிப்பு | கட்டணம் அதிகரிப்பு!
‘லைசென்ஸ்’ புதுப்பிப்பு | கட்டணம் அதிகரிப்பு!
சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை 15 வீதம் அதிகரிக்க அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்தல் சாதாரண மற்றும் ஒருநாள் சேவைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கான கட்டண உயர்வு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும். அதன்படி இந்த ஆண்டு கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
