Connect with us

சினிமா

வசி இலங்கை தமிழர்.. என்னட்ட இல்லாத பணமா என் புருஷன் கிட்ட..? VJ பிரியங்கா ஓபன் டாக்

Published

on

Loading

வசி இலங்கை தமிழர்.. என்னட்ட இல்லாத பணமா என் புருஷன் கிட்ட..? VJ பிரியங்கா ஓபன் டாக்

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக  பணியாற்றி வருபவர்  வி.ஜே. பிரியங்கா தேஷ்பாண்டே.  இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள்  மக்களை கவர்ந்த காரணத்தினால்  நீண்ட காலமாக தொகுப்பாளினியாக செயற்பட்டு வருகின்றார். விஜே பிரியங்கா  2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் அவர்கள் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்தார் பிரியங்கா. அவர் வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர்களுடைய திருமணத்தில்  அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மாத்திரமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர். இந்த நிலையில், விஜே பிரியங்கா அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.  அதில் அவர் கூறுகையில், திருமணத்தின் போது சில youtube களில் பிரியங்கா கணவர் சாதாரண ஆள் கிடையாது, தீவு வாங்கி கொடுத்திருக்கின்றார், 200 கோடி ரூபாய் சொத்து இருக்கு, அரசியல் குடும்பம் அப்படி என்று வீடியோ போட்டு இருந்தாங்க.. ஆனா அதெல்லாம் உண்மை கிடையாது. என் கணவர் வசி இலங்கைத் தமிழர். அவர் குடும்பத்தினர் லண்டன்ல வசிக்கிறாங்க. அங்கு ஒரு நிறுவனத்தில் பணி புரிகின்றார். அவ்வளவுதான். ஆனால் பணத்திற்காக கல்யாணம் பண்ணி இருக்கேன்னு பரப்பிட்டாங்க. நான் இத்தனை வருஷம் உழைச்சிருக்கின்றேன். என்கிட்ட பணம் இருக்காதா? என கூறியுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன