தொழில்நுட்பம்
4K, 8K ஸ்கிரீன் தேவை தானா? மனிதக் கண்ணுக்கு ‘பிக்சல் லிமிட்’ உள்ளதா? ஆய்வுகள் என்ன சொல்கிறது?
4K, 8K ஸ்கிரீன் தேவை தானா? மனிதக் கண்ணுக்கு ‘பிக்சல் லிமிட்’ உள்ளதா? ஆய்வுகள் என்ன சொல்கிறது?
உங்களுக்குத் தெரியும், ஒவ்வொரு வருடமும் டிவி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள், “இது 4K ஸ்கிரீன்… இல்லை, இது 8K” என்று புதிய, அதிகத் தெளிவுத்திறன் கொண்ட ஸ்கிரீன்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால், நாம் அனைவரும் கேட்க வேண்டிய ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: நம்முடைய கண்களால் உண்மையிலேயே எவ்வளவு விவரங்களைப் பார்க்க முடியும்? இவ்வளவு பிக்சல்களை கொண்ட பெரிய ஸ்கிரீன்களைத் தயாரிக்கவும், இயக்கவும் செலவிடப்படும் மகத்தான ஆற்றலும், வளங்களும் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றனவே?160 ஆண்டுகளுக்கும் மேலாகக் கண் மருத்துவர் அலுவலகங்களில் தொங்கிக் கொண்டிருக்கும், லெட்டர்கள் அச்சிடப்பட்ட வெள்ளைச் சுவரைக் கொண்ட அந்தப் பாரம்பரியப் பரிசோதனைதான் ஸ்நெல்லன் விளக்கப்படம் (Snellen chart). ஆனால், இது 19-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு முறை. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானி மாலிஹா அஷ்ரஃப், “இந்த ஸ்நெல்லன் அளவீடு நீண்ட காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், இப்போதுள்ள நவீன டிஜிட்டல் திரைகளுக்கு அது பொருந்துமா என்று யாரும் அமர்ந்து அளவிடவே இல்லை,” என்கிறார்.ஆராய்ச்சிக் குழுவினர் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தனர். அந்தக் பழைய காகித விளக்கப்படத்திற்குப் பதிலாக, முன்னும் பின்னும் நகரக் கூடிய ஒரு பிரத்யேக டிஜிட்டல் திரையைப் பயன்படுத்தினர். அவர்கள் 4K, 8K என்று மொத்தமாக எத்தனை பிக்சல்கள் உள்ளன என்பதைக் கவலைப்படாமல், தனிப்பட்ட நபருக்குத் துல்லியமான ஒரு புதிய அளவீட்டில் கவனம் செலுத்தினர்: அதுதான் ஒரு கோணத்திற்கான பிக்சல்கள் (Pixels Per Degree – PPD).இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கPPD என்றால் என்ன? நீங்க ஒரு திரையைப் பார்க்கும்போது, உங்க மொத்தப் பார்வையில் ஒரு டிகிரி என்ற சிறிய பகுதிக்குள் எத்தனை பிக்சல் சதுரங்கள் அடங்கியுள்ளன என்பதே PPD ஆகும். திரை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, நீங்க எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறுபடும். இதுவே ஒரு நபருக்குப் படம் எவ்வளவு கூர்மையாகத் தெரியும் என்பதைக் கண்டறியும் சிறந்த வழி!இந்தச் சோதனையில் பங்கேற்றவர்கள், இந்த நகரும் திரையில் சாம்பல் (Grayscale) மற்றும் வண்ணங்களில் காட்டப்பட்ட கோடுகளை எப்போது பிரித்துப் பார்க்க முடிந்தது என்பதைக் குறித்துக் காட்டினர். பாரம்பரியமான 20/20 பார்வைத்திறன் கொண்ட ஒரு கண், திரையில் 60 PPD இருக்கும்போது விவரங்களைப் பார்க்க முடியும் என்று ஸ்நெல்லன் முறை கூறுகிறது. ஆனால், விஞ்ஞானிகள் கண்டறிந்தது என்ன தெரியுமா? மனிதக் கண்கள் பெரும்பாலும் இந்த பழைய 60 PPD தரத்தை விடச் சிறப்பாகவே பார்க்கின்றன! நாம் பார்க்கும் படத்தின் நிறம் மற்றும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இந்த உச்ச வரம்பு மாறுபடுகிறது.நாம் தொடர்ந்து அதிக தெளிவுத்திறன் கொண்ட திரைகளை உருவாக்கிக் கொண்டிருந்தாலும், ஒரு கட்டத்தில், மனிதக் கண்ணால் அந்தக் கூடுதல் பிக்சல்களைப் பிரித்தறிய முடியாத “திருப்புமுனைப் புள்ளி” உள்ளது. அந்த வரம்பை அடைந்த பிறகு, அதிக ஆற்றலைச் செலவழித்து 16K அல்லது 32K திரைகளை உருவாக்குவது என்பது பயனற்றதாகிவிடும்.
