இலங்கை
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் காணாமற்போன இளைஞர் சடலமாக நேற்று மீட்பு!
கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் காணாமற்போன இளைஞர் சடலமாக நேற்று மீட்பு!
கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனியன்குளம் பகுதியில் காணாமற்போன 27 வயதுடைய இளைஞர் அழுகிய நிலையில் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வெளிநாடொன்றுக்குச் செல்வதற்கு ஐந்து நாள்கள் இருந்த நிலையில், அந்த இளைஞர் அண்மையில் காணாமல் போயிருந்தார். அவரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இவ்வாறான நிலையிலேயே, இளைஞரின் வீட்டில் இருந்து ஒன்றரைக் கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள காட் டில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கராயன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
