Connect with us

தொழில்நுட்பம்

கேமரா லவ்வர்ஸ்-க்கு சூப்பர் சான்ஸ்: ரூ.25,000 பட்ஜெட்டில் டாப் 4 கேமரா ஸ்மார்ட்போன்கள்!

Published

on

photography phones

Loading

கேமரா லவ்வர்ஸ்-க்கு சூப்பர் சான்ஸ்: ரூ.25,000 பட்ஜெட்டில் டாப் 4 கேமரா ஸ்மார்ட்போன்கள்!

உங்களுடைய நினைவுகளை அதன் உண்மையான நிறங்களுடனும், துல்லியமான விவரங்களுடனும் படம்பிடித்து வைக்க வேண்டும் என்று நீங்க விரும்பினால், கவலைப்பட வேண்டாம். அதிக விலை கொடுக்காமல், ரூ.25,000-க்குள் பட்ஜெட் பிரிவில், சில தரமான கேமரா ஸ்மார்ட்போன்கள் களத்தில் உள்ளன. அந்த ‘கேமரா கிங்ஸ்’ யார் என்று பார்ப்போம்!1. ரெட்மீ நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro)ரெட்மீயின் நோட் 14 ப்ரோ மாடல், அதன் விலை பிரிவில் ஆல்-ரவுண்டர். நீங்க எந்தச் சூழ்நிலையில் புகைப்படம் எடுத்தாலும், அதன் முடிவுகள் பிரமாதமாக இருக்கும். பின்புற 50MP மெயின் கேமரா, 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார். இதன் வீடியோகிராஃபி தரம் மிகச் சிறந்தது. வீடியோ எடுக்கத் தயங்குபவர்கள்கூட இந்த போனை நம்பி வீடியோ எடுக்கலாம். முன்பக்கம் இருக்கும் 20MP கேமரா எடுக்கும் செல்ஃபிகள் மிகத் துல்லியமாகவும், இயல்பான வண்ணங்களுடனும் இருக்கும்.2. போக்கோ எக்ஸ் 7 ப்ரோ (Poco X7 Pro)நீண்ட நேரம் சார்ஜ் நிற்கும் பேட்டரி வேண்டும், அதே சமயம் கேமராவும் சூப்பராக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு Poco X7 Pro தான் சரியான சாய்ஸ். இதிலும் கிட்டத்தட்ட ரெட்மீ போல 50MP + 8MP பின்புற அமைப்பு உள்ளது. இந்தப் போன் 4K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்டது. மேலும், இதன் 16MP முன் கேமரா, பயண வ்லாக் (Vlog) எடுப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.3. நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a)சற்று வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்ட நத்திங், கேமராவிலும் அசத்துகிறது. இதன் கேமரா அமைப்பைப் பார்த்தால், இது ரூ.25,000-க்குள் இருப்பது ஆச்சரியம். இதில் 50MP மெயின் கேமராவுடன், 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஒரு 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. இதன் 32MP முன் கேமரா, மிகவும் நுட்பமான விவரங்களுடன் கூடிய தெளிவான செல்ஃபிகளை எடுக்கிறது.4. கேலக்ஸி எம்17 (Galaxy M17)குறைந்த விலையில் ஒ.ஐ.எஸ். (Optical Image Stabilization) வசதியைக் கொடுக்கும் போன் இதுதான். இந்த வசதி மிக முக்கியமான ஒன்று. ஓ.ஐ.எஸ் இருந்தால், புகைப்படம் எடுக்கும்போது கை அசைந்தாலும், படம் குலுங்காமல் தெளிவாக வரும். இது வீடியோக்களின் தரத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. இதன் 50MP OIS பிரைமரி சென்சார் காரணமாக, குறைந்த வெளிச்சத்தில் (Low Light) எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகத் தெளிவாக இருக்கும். இந்த 4 ஸ்மார்ட்போன்களும், உங்க பட்ஜெட்டிற்குள் சிறந்த கேமரா அனுபவத்தை உறுதி செய்கின்றன. இதில் உங்க தேவைக்கு ஏற்ற போனை நீங்க தேர்ந்தெடுக்கலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன